ஸ்டிக் வடிவில், பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முழுமையான செயல்பாடுகளைக் கொண்ட ஸ்டிக் கம்ப்யூட்டர்களை த் தற்போது, ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயாரித்து வெளியிட்டு வருகின்றன. முதன் முதலில், இண்டெல் நிறுவனம் இதனை வெளியிட்டு, அடிக்கடி பயணங்களில் உள்ளோர் பயன்படுத்த எளிதான சாதனம் என்ற பெயரை நிலைப்படுத்தியத ு. அந்த வரிசையில், தற்போது லெனோவா நிறுவனம் ஸ்டிக் கம்ப்யூட்டர் ஒன்றை, Lenovo ideacentre Stick 300 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது . இது தற்போது இந்தியாவில் கிடைக்கிறது. இந்தியாவில் இதனை Stick PC 300 என லெனோவா அழைக்கிறது.
இதன் அதிக பட்ச விலை ரூ.9,999.
இது குறித்த தகவல்கள் சென்ற ஜூன் மாதம் வெளிவந்தன. இது இண்டெல் நிறுவனம் வெளியிட்ட Intel Compute Stick போலவே தோற்றத்திலும், செயல்பாட்டிலும் உள்ளது. இதனை நம் டி.வி. அல்லது மானிட்டரில் உள்ள எச்.டி.எம்.ஐ. போர்ட்டில் இணைத்துவிட்டால் , முழுமையான ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் நமக்குப் பயன்படுத்த கிடைக்கும்.
இந்த ஸ்டிக் பி.சி. 300 கம்ப்யூட்டர் ஸ்டிக்கில், குவாட் கோர் இண்டெல் நிறுவனத்தின் Baytrial Z3735F ப்ராசசர் இணைக்கப்பட்டுள் ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8.1. இதனை விண்டோஸ் 10க்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி.யாக உயர்த்தலாம்.வை பி மற்றும் புளுடூத் செயல்பாடுகள், நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன.
ஒரு எச்.டி.எம்.ஐ. போர்ட், ஒரு மைக்ரோ யு.எஸ்.பி. 2 போர்ட், பவர் போர்ட், யு.எஸ்.பி. போர்ட் ஆகியவை உள்ளன. இதன் பரிமாணம் 100 x 38 x 15 மிமீ. எடை 65 கிராம்.
லெனோவா நிறுவனத்தின் அதிகார பூர்வ விற்பனை தளம் மூலம் இதனை வாங்கிக் கொள்ளலாம்.