கன்ட்ரோல்-ஆல்ட்-டெலிட்: தவறை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்...!

Puthiya Thozhilnutpam
கம்ப்யூட்டரை லாக் ஆன் செய்வதற்கு 'கன்ட்ரோல் - ஆல்ட் - டெலிட்' (Control-Alt-Delete) ஆகிய மூன்று பட்டன்களையும் ஒரு சேர அழுத்துவோம்.



நம் கம்ப்யூட்டரை ஆன் செய்வதற்கு இந்த மூன்று பட்டன்களையும் ஒரு சேர அழுத்த வேண்டியதிருக்கிறதே என்று சிலர் அலுத்துக்கொள்வது உண்டு.
அதற்கு, உரிய விளக்கத்தை அளித்துள்ளதோடு, தவறையும் பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

இது குறித்து ஹாவர்டு பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “அது ஒரு தவறு. உண்மையில் ஒரு பட்டன்தான் பயன்படுத்தும்படி செய்திருக்க வேண்டும். ஐ.பி.எம். கீ-போர்டை வடிவமைத்த நபர், எங்களது ஒற்றை பட்டனைத் தர விரும்பவில்லை” என்றார்.