
கேள்வி: நான் இன்டர்நெட் சென்டர் வைத்துள்ளேன். இ பொது சேவை மையம் தொடங்க வழிமுறைகள் என்ன? யாரை தொடர்பு கொள்ள வேண்டும் ? ஏற்கனவே தாலுகா அலுவலகம் அருகில் இ பொது சேவை மையம் உள்ளது. நான் இ பொது சேவை மையம் தொடங்க முடியுமா ?
பதில்:
நம்மால் தமிழக அரசின் (e -service )இ - சேவை மையத்தினை தொடங்க முடியாது. காரணம், இது மிகப் பெரிய அளவில் பெரிய நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு , அவர்கள் அனுமதி வாங்கி , முன்பணம் செலுத்தி இந்த இ - சேவை மையத்தினை செயல்படுத்துகின்றனர்.
ஆனால், நம்மால், இந்திய அரசின் ( csc ) பொது சேவை மையத்தினை தொடங்க முடியும். இதற்க்கு, இந்திய அரசின் ( csc ) பொது சேவை மையத்தின் இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்தால், அனுமதி கிடைத்தவுடன் நீங்கள் இந்திய அரசின் ( csc ) பொது சேவை மையத்தினை தொடங்களாம்.