Puthiya Thozhilnutpam |
மாறாக கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த கோககோலா நிறுவனம் இந்த வருடம் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
கூகுள் நிறுவனம் இரண்டாம் இடத்தையும், ஐபிஎம். நிறுவனம் நான்காம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. முன்னணி சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனம் இந்த வருடம் 52வது இடத்தை பிடித்திருக்கிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இருக்கும் பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது.
ஆட்டொமொபைல் துறையை சேர்ந்த 14 நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. இதற்கடுத்து 12 எஃப்.எம்.சி.ஜி. நிறுவனங்களும், 12 டெக்னாலஜி நிறுவனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தப் பட்டியலில் 55 அமெரிக்க நிறுவனங்கள் இடம் பிடித்திருக்கின்றன.ஜெர்மனியில் இருந்து 9 நிறுவனங்களும், ஜப்பான் மற்றும் பிரான்ஸில் இருந்து தலா ஏழு நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.
இந்தப் பட்டியலில் ஒரு இந்திய நிறுவனமும் இடம்பெறவில்லை.