Puthiya Tholilnutpam |
வாட்ஸ்அப் நிறுவனம் விரை விலேயே வாய்ஸ் கால் சேவையை அளிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுவரை வெறுமனே தகவல் களை பரிமாற்றம் செய்துவரும் 45 கோடி வாடிக்கையாளர்கள் இனி குரல் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும்.ஏப்ரல் மாதத்தில் இத்தகைய சேவையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜான் கோம் தெரிவித்துள்ளார்.ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் 1,900 கோடி டாலருக்கு வாட்ஸ் அப் நிறுவனத்தை வாங்கியது. இதைத் தொடர்ந்து இத்தகைய அறிவிப்பை வாட்ஸ் அப் அறிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இத்தகைய சேவை அளிக்கப் பட்டால் அது செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வருவாயை வெகுவாக பாதிக்கும் என்று தெரிகிறது.ஏற்கெனவே தென் கொரியா வைச் சேர்ந்த காகோடாக், சீனாவின் வெசாட், இஸ்ரேலின் விபர் ஆகிய நிறுவனங்கள் குரல்வழி தகவல் பரிமாற்ற சேவை அளிப்பதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்களின் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் இத்தகைய குரல் பரிமாற்ற சேவையை அளிக்கத் தொடங்கினால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் பாதிக்கப்படும் என தெரிகிறது. கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற சேவை மூலம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குக் கிடைத்த வருமானம் 1,200 கோடி டாலராகும்.
THANKS ; THE HINDU