| PUTHIYA THOLILNUTPAM |
முக்கிய தினங்களின்போது கூகுள் தனது தேடுபொறி பக்கத்தில் வித்தியாசமான டூடுல்களை போட்டு அசத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று கூகுள் போட்ட டூடுல் பலரையும் வெகுவாக ஈர்த்தது.
இதற்கு முந்தைய சுதந்திர தினங்களில் மூவர்ணக் கொடியையும், எத்தனையாவது சுதந்திர தினம் என்பதையும் வைத்து கூகுள் டூடுல் போடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வித்தியாசமாக மூவர்ணக் கொடியின் பின்புலத்தில் இந்திய தபால் தலையை டூடுலாக போட்டிருந்தது கூகுள். இந்த தபால் தலைக்கும் இந்திய விடுதலைக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் குழம்பி அதன் மீது கிளிக் செய்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தபால் தலை அது என்ற விவரம் தெரியவந்தது.
THANKS ; THE HINDU