தற்பொழுது கூகுளால் நிர்வகிக்கப்படும் Android இயங்குதளமானது அதிகமானஸ்மார்ட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒரு இயங்குதளமாக விளங்குகிறது.
இந்த Android இயங்குதளம் பற்றி நாம் அறிய வேண்டிய பல சுவாரஷ்யமான தகவல்கள் பின்வருமாறு.
1. Android இயங்குதளமானது ஆரம்பத்திலிருந்தே Google ஆல் உருவாக்கப்பட்ட ஒரு இயங்குதளம் அல்ல. மாறாக அது 2003 ஆம் ஆண்டில் Andy Rubin என்பவரால் உருவாக்கப்பட்டது. பிறகு இதனை கூகுள் நிறுவனம் 2005 ஆண்டில் 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது.
2. Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த முதல் Smart சாதனம் HTC G1 என்பதாகும். இது 2008 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
3. Android இன் மிக அண்மைய பதிப்பு Android மார்ஷ்மல்லோ (Marshmallow) எனும் பதிப்பாகும். இது 2015 செப்டம்பர் 29 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது.
4. Android இயங்குதளம் 2009 ஆம் ஆண்டு February மாதம் முதன்முதலாக மேம்படுத்தப்பட்டது. அந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பின் பெயர் Cupcake என்பதாகும்.
5. Cupcake தொடக்கம் Marshmallow வரையான Android இன் பதிப்புக்கள் பின்வருமாறு.
Android Cupcake =====> Apr 2009
Android Donut =====> Sep 2009
Android Eclair =====> Oct 2009
Android Froyo =====> May 2010
Android Gingerbread =====> Dec 2010
Android Honeycomb =====> Feb 2011
Android Icecream Sandwich =====> Oct 2011
Android Jelly been =====> July 2012
Andoid Kitkat =====> Oct 2013
Andoid Lollipop =====> Oct 2014
Andoid Marshmallow =====> Sep 2015