விண்டோஸ்க்கு மாறும் நோக்கியா எக்ஸ் ஃபோன்கள்...!

Puthiya Tholilnutpam
நோக்கியா எக்ஸ் ரக ஃபோன்களில் இனி விண்டோஸ் இயங்குதளம் இடம் பெறும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா எக்ஸ் ரக ஃபோன்கள் கடந்த 4 மாதத்திற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதில் ஆண்டிராய்டு இயங்குதளம் இடம் பெற்றிருந்தது. மற்ற நோக்கியா ஃபோன்கள் விண்டோஸ் தளத்தில் இயங்கும் நிலையில் நோக்கியா எக்ஸ் ஃபோன்கள் மட்டும் ஆண்டிராய்டில் இயங்கியது. இதற்கு உலக அளவில் மிகுந்த வரவேற்பும் இருந்தது. இந்நிலையில் இந்த ஃபோனையும் விண்டோஸ் தளத்துக்கு நோக்கியா தற்போது மாற்றியுள்ளது. உலகிலுள்ள ஸ்மார்ட்ஃபோன்களில் 80 முதல் 85 சதவிகிதம் ஆண்டிராய்டு இயங்கு தளம் கொண்டவையாக உள்ளன.

THANKS ; PUTHIYA THALAIMURAI