| Puthiya Tholilnutpam |
ஆண்ட்ராய்டு வகை கைபேசிகளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். அதன் ஆபத்தின் தன்மை குறித்து பயனாளியே முடிவு செய்யும் சூழ்நிலை உள்ளது. பயனுள்ளவை என்று கருதி பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன்களில் பல ஆவணமற்றவை. இவை உங்கள் கைபேசியில் உள்ள தகவல்களை திருடி அதன் மூலம் கணினியில் உள்ள தகவல்களையும் திருடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
உலகத்தில் உள்ள 10- கைபேசிகளில் மூன்று பாதுகாப்பற்றவை என்கிறது கைபேசிகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வு. இணையதளங்களைக் காட்டிலும் கையடக்க கைபேசிகளுக்குள் நுழைவது, தகவல் திருடர்களான ஹேக்கர்களுக்கு எளிதாகிவிட்டதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆண்டராய்டு வகை கைபேசிகளில் நீங்கள் எதை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்யலாம். அதன் ஆபத்தின் தன்மை குறித்து பயனாளியே முடிவு செய்யும் சூழ்நிலை உள்ளது. பயனுள்ளவை என்று கருதி பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன்களில் பல ஆவணமற்றவை. இவை உங்கள் கைபேசியில் உள்ள தகவல்களை திருடி அதன் மூலம் கணினியில் உள்ள தகவல்களையும் திருடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
பதிவிறக்கம் செய்யும் மொபைல் அப்ளிகேஷன்கள் பாதுகாப்பற்றதாக இருந்தால் அவைகள் உங்கள் கைபேசிகளுக்குள் எளிதில் நுழையும் உளவாளி. கைபேசி சந்தையில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் பாதுகாப்பற்றவை என்கிறார்கள் சர்வதேச தொழிற்நுட்ப வல்லுனர்கள். உங்கள் கைபேசிக்கு பொது இடங்களில் மின்னூட்டம் அளிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அங்கும், உங்கள் கைபேசியின் தகவல்கள் திருடப்படலாம். இணையத்திலிருந்து படங்கள், காட்சிகளை பதிவிறக்கம் செய்யும் போது தேவையில்லாத, உங்கள் கைபேசியை பாதிக்கக்கூடிய பிழைகளும் உள்ளே நுழைந்து தகவல்களை திருட உதவலாம். உணவு விடுதிகள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற வைஃபை இணைப்பை பயன்படுத்துவதும் பாதுகாப்பற்றது என்கிறார்கள் வல்லுனர்கள்.
சர்வதேச அளவில் நடந்துவரும் இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த அனைத்து அரசுகளும் இணைந்து ஒரேமாதிரியான சட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்கிறார்கள் வல்லுனர்கள்.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கைபேசிகளை பயன்படுத்துகின்றனர். டில்லிக்கு அடுத்ததாக, தமிழகத்தில் அதிக கைபேசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன என்கிறது தொலைத்தொடர்பு கண்காணிப்பு ஆணையம். இந்த சூழ்நிலையில், கைபேசிகளின் பாதுகாப்பு அடுத்த தலைமுறைக்கு பெரும் பிரச்னையாக மாறிவிடும் என்கிறார்கள் தொழிற்நுட்ப வல்லுனர்கள்.
THANKS ; PUTHIYA THALAIMURAI